ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந் தான்,ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தானிருந் தான்உணர்ந்து எட்டே.
திருமூலர், திருமந்திரம், முதலாம் தந்திரம், 1. கடவுள் வாழ்த்து, 1
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே
திருமூலர், திருமந்திரம், முதலாம் தந்திரம், 16. அறஞ்செய்வான் திறன், 252
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே
திருமூலர், திருமந்திரம், ஏழாம் தந்திரம், 38. இதோபதேஶம், 2104 ஶ
No comments:
Post a Comment